Wednesday, December 23, 2009

நாளை முதல்..


நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.

நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.

இன்று கல்லூரியின் கடைசி நாள்..

Saturday, November 21, 2009

நிலா



ஜோடி ஒன்று
தேடாத
தனிப் பறவை.

Sunday, November 15, 2009

மல்லிகையும் மட்டனும்



நடக்கும் பாதையில்
மல்லிகையோ ரோஜாவோ
மிதிக்காமல் செல்கிறோம்..

சிறிய எறும்புதான்
கடிக்காது எனினும்
விலகிச் செல்கிறோம்..

ஆட்டுக்குட்டியை
ஆசையாய் வருடி
உணவு தருகிறோம்..

ஆனாலும் ஆசையாய்
சாப்பிடுகிறோம்
மட்டனும் சிக்கனும்..

Sunday, November 8, 2009

மலை..


முகில் தேவதை
துயில் கொள்ளும்
படுக்கையறை...

அக்கரைப் பச்சை

வெயிலடிக்கும்போது
மழைக்காக
ஏங்கும் மனசு
மழை பெய்யும்போது
வெயிலுக்காக ஏங்கும்..

Thursday, November 5, 2009

ஏன்..

காலையில்
பூக்கள் மலர்ந்திடும்
புதுச்சோலையில் உலவிடலாம்..

சிட்டுக் குருவிகளுக்கு
உணவு தந்திடலாம்
அவை கொத்திதின்பதை
பார்த்து ரசித்திடலாம்..

தூரல் போடும்
சாரல் மழையில்
மெல்ல நனைந்திடலாம்..

மாலையில்
மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு
வானத்திற்கு
மனதை தன்திடலாம்..

இரவின் நிலவில்
மெல்லிய இசை கேட்டு
உறங்கிடலாம்..

இத்துணை இன்பம்
இப்பூமியில் கொட்டிக்கிடக்க
கத்திகளுடனும்
துப்பாக்கிகளுடனும்
அலைவதேன் மானிட இனமே..

முரண்

ஐந்தும் பத்தும்
திருடியவர்
லாக்கப்பில் சாவு..
ஆயிரம் கோடி
சுருட்டியவருக்கு
ராஜ மரியாதை..

புன்னகை



வார்த்தைகள்
ஏதுமின்றி
அன்பை வெளிப்படுத்தும்
அழகான மொழி.