Sunday, January 31, 2010

ஒரு மரம் பேசுகிறது...


மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...

மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?

மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...

எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?

5 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

சிசுவையே/மனிதனையே கொல்ல துடிக்கிற என் மானிடனுக்கு நீ எம்மாத்திரம்?

இன்று நீ நாளை நான்...

வைகறை நிலா said...

நீங்கள் எழுதியது உண்மை..
எனினும் கவிஞர்களால் உலகை மாற்ற முடியும் அல்லவா?..கவிதையை நேசிக்கின்ற மனிதர்களால் ஒரு மலரை கூட மிதிக்க மனம் வராது. இயற்கையை, மனிதர்களை நேசிக்க அரம்பித்துவிட்டால் சிசு கொலையும் இருக்காது, மரம் வெட்டப்படுதலும் நடக்காது என்று நினைக்கிறேன்....மனிதர்களை மென்மையாக மாற்ற வல்ல கவிதைகளை மேலும் எழுதுங்கள் வாசன்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நீங்கள் எழுதியதும் உண்மை...கவிஞர்களால் உலகை மாற்ற முடியும்,உதாரணம் நம் பாரதி.

கவிதையை நேசிக்கின்ற மனிதனால் ஒரு மலரை கூட மிதிக்க, இல்லை பறிக்கக்கூட மனம்வராது.

இயற்கையை, மனிதர்களை நேசிக்கும் மனிதன் ஏதோ ஒருதருணத்தில் ஏமாற்றத்தால் அல்லது ஏதோ ஒன்றால் வெறித்தனமாக மாறிவிடுகின்றான்.

மனிதர்களை மென்மையாக மாற்ற வல்ல கவிதைகளை கண்டிப்பாக எழுத முற்படுவோம்.

கவிதன் said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் மனிதகுலத்தின் மீது அக்கறையுடன் எழுதிருக்கிறீர்கள்... அது நிறைவேறட்டும்...... கவிதைப்பயணம் தொடரட்டும்..... வாழ்த்துக்கள்!

வைகறை நிலா said...

தங்களின் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி..

அன்பு நிறைந்த இதயம்
உயர்வானது..
மிகவும் உயர்வானது..