அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..
மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..
உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..
காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..
10 comments:
காதலெனும் கடற்கரை காற்று உன்மீது என்றும் மகிழ்ச்சியாய் வீசட்டும்...
எங்கள் மீது கவிதையெனும் வடிவில் தினம் சேரட்டும்...
உற்ற துணையின்றி இப்போ நீயிருந்தால் இவையாவும் காற்றாய் கடந்து போகட்டும்...
வாசன்..எனும் கவிஞர் பின்னூட்டத்தையும் கவிதை வடிவில் எழுதுபவர் என்று இதனால் சகல கவிப்ப்ரியர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.
அன்புள்ள நிலா,
என்ன இது? இப்படியெல்லாமா கலாய்கிறது?
எதா இருந்தாலும் பேசி தீர்த்து கொள்வோம் நமக்குள்... இப்படியா பழி வாங்குறது...
எனக்கு முதன்முதலாக கவிஞர் பட்டமும் மற்றும் பெறுமையும் அளித்த நிலாவிற்கு என் நன்றிகள்.
அலை வீசும் கடலோரம் கவிதை மனசையும் அடித்துச்செல்கிறது .... அருமை நிலா!!! வாழ்த்துக்கள்!
கவிஞர் வாசன் என்ற கருத்தை நானும் ஒரு மனதாக ஆமோதிக்கிறேன்!!! கவிஞருக்கு வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கு மிக்க நன்றி கவிதன்..
அன்புள்ள கவிதன்,
தங்களின் ஒரு மனதான ஆமோதிப்புக்கும் மற்றும் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி...
இரண்டு கவிஞர்களின் வருகைக்கும் நன்றி..
அருமை!
நல்ல சந்தமிகுந்த கவிதை!
//சந்தமிகு கவிதை//
தங்களுடைய அழகான பாராட்டுக்கு மிக்க நன்றி...
Post a Comment