Saturday, April 17, 2010

நியாயமா...மானிடா...?

மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..

உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...

செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..

இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..

தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?

21 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

கடவுளே!

உன்மீது நான் ஒன்றும்
அவதூறு சொல்லவில்லை...

நீ செய்தது தவறென்று
வாயுரைத்து சொல்கின்றேன்...

நான் தவறு செய்யும் தினமே
என்னை நீ தண்டித்து இருந்தால்

உன்னை நான் இன்று
அவ்வாறு கேட்டு இருக்கமாட்டேன்...

நிலா, உங்கள் கேள்வி கடவுளின் வடிவில் நியாயமாக அருமையாக நல்லா எழுத்துருவில் இருக்கின்றது. வாழ்த்துகள்...

Priya said...

மிகவும் அழகான யதார்த்தமான கவிதை!!!...

வைகறை நிலா said...

# வாசன்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாசன்..

உங்கள் வலைப்பூவில் அழகான, மற்றும் சமூக விழிப்புணர்வு கவிதைகளையும் வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்..

வைகறை நிலா said...

# பிரியா..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரியா..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நிலா,

தங்களின் பார்வைக்கும், மனதின் எண்ணங்களுக்கும், அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி...

அன்புடன் மலிக்கா said...

நிலா உங்கள் தளத்துக்கு முதல் வருக நான்.
மிக அருமையான கேள்விக்கனைகள்
மானிடா நியாயமா? சூப்பர்

வைகறை நிலா said...

தங்களுடைய வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது..

வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்..

Bala said...

பிஜிங்கில் ஒலிம்பிக் தொடக்க நாள் அன்று பெய்யவிருந்த மழையை செயற்கையாக தடுத்தார்கள். மனிதனின் ஒவ்வொரு செயலும் அவன் தலையில் தான் வந்து விடியும். உங்கள் ஆதங்கம் சரியே. வாழ்த்துக்கள்.

வைகறை நிலா said...

# Bala..

// பிஜிங்கில்..//
தங்கள் கருத்து இயற்கையான மழை அழிக்கப்படுவதற்கான சாட்சியை தருகிறது.

வாழ்க்கைக்கு அத்யாவசியமான தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு அல்லவா தெரியும் இயற்கையான மழையை அழிப்பது பாவமென்று.

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..

காஞ்சி முரளி said...

'வைகறை நிலவே'...
முதல் முதலாய் நிலவில் என் கருத்துத் தடங்கள்..

// மேகம்....
உலோகம்....
செடிகள் மரங்கள்....
மழை....///
இவையெல்லாம் அளித்தவனுக்கு
மனிதனின் நன்றிக்கடன்தான் இந்த பழி சுமத்தல்....

மனிதாபிமானமற்ற....
மனிதநேயமற்றவன்தான் மனிதன்...
இவனிடமா...?

அன்பு, நியாயம், தருமம், நேர்மை, ஈவு.. இரக்கம், நன்றியுணர்வு...

இவை இல்லாததால்தான் இந்த பழி சுமத்தல்....

அர்த்தமுள்ள, அழகான, சமூகசிந்தனை கொண்ட சிறந்த கவிதை....

வாழ்த்துக்கள்...
நட்புடன்...
காஞ்சி முரளி.....

காஞ்சி முரளி said...

கருத்துரையில் வெளியிட அல்ல...
தங்கள் பார்வைக்கு மட்டும்.....
வெளியிடுவதென்றால் வெளியிட்டுகொள்ளுங்கள்...

வைகறை நிலாவே...
கடந்த 17 அன்று வடித்த தங்கள் "நியாயமா... மானிடனே" என்ற கவிதையை இன்றுதான் கண்டேன்... கருத்துரை இட்டேன்.. அக்கருத்துரையில் முதல் வரியில் சொன்னபடி..
"வைகறை நிலவே....
முதன்முதலாய் நிலவின் கருத்துத் தடம்" பதித்தேன்....

பின்னர்,

தாங்கள் வடித்த 15 கவிதைகளையும் படித்தேன்... மலைத்தேன்... அத்தனையும் நல்ல அழகான கவிதைகள்...
நான் வருத்தப்பட்டேன்..
இத்தனை நாளாய்
இக்கவிதைகளை
இனங்காணமல்
இருந்துவிட்டோமே என்று...

"புன்னகை"யில் இரு வரியில் அழகான கவிதை.. அழகான மழலையின் போடோவுடன்...

"முரண்"னில் இன்றைய யதார்த்தமான நிலையை சிறு கவிதயாய்...

"ஏன்.."ல் ஓர் இயற்கை பேரெழிலை அழகுடன் கவிதை வரியில் வடித்து.. இறுதியாய்... மனித சமுதாயத்திற்கு சரியான சவுக்கடி...

"அக்கரைப் பச்சை"யில் அக்கரைப் பச்சை பழமொழியை வெயில், மழை இரு வார்த்தைகளை கொண்டு.... அற்புதம்...

"மலை"யில் முகிலின் படுக்கையறை.. சூப்பர்...

"மல்லிகையும் மட்டனும்" கவிதையில் மலரை மதித்து மிதிக்காமல் செல்லும் நாம்... ஓர் உயிரினை உண்பது... நல்ல வரிகள்...

cont... (part-2)

அண்ணாமலை..!! said...

ஆதங்கப்பட்டிருக்கிறார் கடவுள்!
என்ன செய்ய! மெய்ஞானம் விஞ்ஞானத்தைக் கேள்வி கேட்டிருக்கிறது!
அருமை!
வைகறை நிலா!

காஞ்சி முரளி said...

PART - 2

"நிலா" தங்கள் வலைதளத்தின் பெயரில்... இதுவரை நான் அறியாச் சிந்தனை... புதிய கோணத்தில்...

"நாளாய் முதல்" கவிதை மிகவும் அற்புதம்... என் முதற் கவிதையும் - கல்லூரி கடைசி நாளில் எழுதிய கவிதையின் வரியில் "இந்நாட்களை மறந்தும் செல்லவில்லை.. மறைத்தும் செல்லவில்லை..." என்பதுபோல இவ்வரிகள் என்றும் 'நெஞ்சில் இட்ட கோலம்... அது என்றும் அழிவதில்லை'... சூபெர்ப்....

அடுத்து... 2010ல்
"ஒரு மரம் பேசுகிறது" - ஓர் மரத்தின் மனதாய்... இறுதியில் 'சிசு கொலைதான் பாவமா...? என்று மரத்தையும் மனிதரில் ஒருவரை நினைக்க வைத்த இக்கவி... சிறந்த கவிதை...

"நீ வரும் வழியில்" - யாருடைய சிரிப்பை காண... அழகான கவிதை...

"அலைவீசும் கடலோரம்..." - இந்த ஏக்கம், தாக்கம், தேக்கம், வைக்கும்.. முடிவரிகள்.. இவர் காதலனா...? காதலியா...?

"என் இதய வானில்..." - என் இதய... அன்பெனும்... இந்த இரு வார்த்தைகளில் அழகான கவிதை....

"வாழ்க்கையின் பாதையில்..." வாழ்க்கையில் வருவோர் போவோர்... இவர்களில் நெஞ்சை விட்டு நீங்காதவர் யார்..? என்பதை அழகாய்....

மொத்தத்தில்...
வைகறை நிலா கவிதைகள் அனைத்தும்...
"நெஞ்சில் நீங்கா கவிதைகள்....

வாழ்த்துக்கள்...
மென்மேலும் சிறந்த கவி வடிக்க வாழ்த்துக்கள்...

நட்புடன்..
காஞ்சி முரளி....

வைகறை நிலா said...

# காஞ்சி முரளி
தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி..

அனைத்து கவிதைகளையும் வாசித்து பாராட்டியிருக்கிறீர்கள்..

கல்லூரி நாட்களை யாராலும் மறக்க முடியாது என்று சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்..

நீங்களும் ஒர் வலைத்தளம் வடிவமைத்து உங்கள் கவிதைகளை வெளியிடலாமே..

வைகறை நிலா said...

# அண்ணாமலை..

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

விழிப்புணர்வை ஏற்படுத்தும் கவிதை அருமை கடவுள் கேட்பதாக அமைந்தது சிறப்பாக உள்ளது பாராட்டுகள் வைகறை நிலா

வைகறை நிலா said...

தங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி...

கவிதன் said...

சமூக அக்கறையுடனான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லதொரு கவிதை நிலா.... பாராட்டுக்கள்!

வைகறை நிலா said...

பாராட்டுக்கு மிக்க நன்றி கவிதன்..

அன்புடன் அருணா said...

நல்ல கேள்வி!

வைகறை நிலா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அருணா..!