"சாதிகள் இல்லையடி பாப்பா"
இது வகுப்பறையில்..
"நீங்கள் எந்த ஜாதி"
இது அட்மிஷன் அறையில்..
"வரதட்சணையை ஒழிப்போம்"
இது மேடைப் பேச்சில்..
"எத்தனை சவரன் போடுவீர்கள்"
இது பெண் பார்க்கும் வீட்டில்..
"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
இது பள்ளிபாட புத்தகத்தில்..
"இருவகை குவளைகள்"
இது எங்கள் ஊர் தேநீர் கடைகளில்..
எனினும் நாங்கள்
பெருமையாக(பொய்யாக) சொல்வோம்
வேற்றுமையில் ஒற்றுமை
இதுதான் எங்கள் இந்தியா..
19 comments:
இன்று தான் உங்கள் தளம் வந்தேன். கவிதை மனிதரின் வேஷங்க களை
எடுத்து சொல்கிறது. பாராடுக்கள்.
தங்களுடைய முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்..
எத்தனை முரண்பாடான செயல்கள்... அத்தனைக்கும் உடன்பாடாய் நாமும் செய்ல்பட்டுக்கொண்டு...
வரிகள் குறைவாய் இருந்தாலும்... மனதுக்குள் வலியை ஏற்படுத்திக்கொண்டு...
உண்மை வாசன்.. முரண்பாடான விஷயங்களை நம்மால் மாற்ற முடியவில்லையே..
///
வேற்றுமையில் ஒற்றுமை
இதுதான் எங்கள் இந்தியா.. !
///
வெளில சொல்லிக்குறோம் இப்படி!
ஆனா, என்னென்னமோ நடக்குது!
உங்கள் வரிகள் நல்லாயிருக்கு!
Azhagana kavithai
# அண்ணாமலை
தாங்கள் எழுதியது மிகவும் சரி..
நீண்ட காலாமாய் நாம் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம்..
குறைகள் நீங்கிய உண்மையான "வேற்றுமையில் ஒற்றுமை" காணும் இந்தியா வெகுவிரைவில் உருவாகட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
# காயத்ரி
தங்களுடைய வருக்கைக்கும் இனிமையான கருத்துக்கும் மிக்க நன்றி..
முகமுடி கிழிக்கும் கவிதை இது! அருமை!வாழ்த்துக்கள்!
முகமுடி கிழிக்கும் கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
முகமுடி கிழிக்கும் கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!
தங்களுடைய வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
இதுவே வேறு ஏதாவது நாடா இருந்தா அத்தனை மாநிலமும் தனி நாடா மாறி இருக்கும். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை. கூட்டு குடும்பம்னா கொஞ்சம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.
//கூட்டு குடும்பம்னா கொஞ்சம் பிரச்சனை இருக்கத்தான் செய்யும்.//
சரியான உதாரணம் சொல்லியிருகிறீர்கள்..
நம் நாட்டில் உள்ள பல உயர்வான பாரம்பரிய விஷயங்கள் பிற நாடுகளில் இல்லை..
ஆனால் சில காரணங்கள் நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாழ்வியல் முரண்பாடுகளின் வகைபாடுகளைக் கவிபாடியமை துல்லியம். அருமை..
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆதிரா..!
ஒருமுறை வந்து பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!
Ungal varutham puriyuthu..
ippadiye pathi seithal mattum pothathu
Nadai murayil nengal mathiriyai irungal ...
Nanraga ullathu ungal varutham..
நிச்சயமாக.. நான் caste ஐ விரும்புவதில்லை. என்னுடைய தோழிகளின் caste எனக்கு தெரியாது..என்னால் முடிந்ததை செய்வேன்..
நம் நாட்டில் caste என்பது இல்லாத நிலை வரவேண்டும்.. எல்லா ப்ரச்சனைகளுக்கும் காரணம் அதுவே..
Post a Comment