நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.
நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.
நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.
இன்று கல்லூரியின் கடைசி நாள்..
4 comments:
வணக்கம் தங்கள் கவிதைகளை இப்போதுதான் வாசிக்கத் தொடங்குகிறேன். கல்லுரிக் காலம் நினை;வுகளில் இருந்து மாறவே முடியாத ஒரு பொற்காலம். மிக எளிமையாக கவிதையைச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
கல்லூரி காலம் இனிய பொற்காலம்.
உங்கள் வாழ்த்துக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.
மறக்கமுடியாத துயர் நிறைந்த பிரிவென்றால் அதுதான் நிலா.... கல்லூரிக்கால நிகழ்வுகள் மனதை விட்டு என்றும் நீங்காதவை.... உங்கள் கவிதை மற்றுமொருமுறை அத்தனையும் கண்முன் நிறுத்துகிறது!
எளிதில் மனதைத்தொடும் கவிதை...... வாழ்த்துக்கள் நிலா!
//கல்லூரிக்கால நிகழ்வுகள் மனதை விட்டு என்றும் நீங்காதவை.!//
உண்மை..
எல்லொருடைய வாழ்க்கையிலும் கல்லூரிக் காலம் மனதை விட்டு என்றுமே நீங்காதது..
மீண்டும் கிடைக்காத ஆனால் மறக்க முடியாத நாட்கள்..கல்லூரி நாட்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதன்..
Post a Comment