Saturday, November 21, 2009

நிலா



ஜோடி ஒன்று
தேடாத
தனிப் பறவை.

9 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ஜோடி தேடி கிடைக்காமால் என்னவோ? மாதம் ஒருநாள் மறைந்து விடுகிறாள். பாதி நாட்கள் மெலிந்து போய்விடுகின்றாள்.

வைகறை நிலா said...

கவிஞர்களுக்கே உரிய முறையில் கற்பனை செய்திருக்கிறீர்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

நன்றி. மன்னிக்கவும். நான் கவிஞன் அல்ல. என்றும் உங்களில் ஒரு வாசகனாய்.

வைகறை நிலா said...

கவிதை அருவி கொட்டுகிறதே உங்கள் வலைப்பூவில்...?

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அருவியினை நான் மட்டுமல்ல நீங்களும், எல்லாரும் ரசித்திட விரும்புகின்றேன்.

கொட்டுவது இங்கும்தானே...

www.eraaedwin.com said...

ஜோடி தேடாத எதையும் நம்புவதில்லை நான். ஏனெனில் அவை போலி . ஆனால் நிலாவை அப்படி நிராகரித்து விட முடியவில்லை
எட்வின்

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள எட்வின்,

//ஜோடி தேடாத எதையும் நம்புவதில்லை நான். ஏனெனில் அவை போலி . ஆனால் நிலாவை அப்படி நிராகரித்து விட முடியவில்லை//

தங்களின் வரிகள் அருமை...

நிலவை மட்டுமல்ல, இயற்கையை நிராகரிக்க முடியாது என்பதும் உண்மை.

சூரியனும் சந்திரனும் காதலர்களாம். வானவீதியில் இவன் அவளை தேடி பகலிலும். இவள் அவனை தேடி இரவிலும்.

ஆமாம், ஜோடி தேடும் இவர்களும் உங்கள் வரிகளுக்கு ஏற்றார்போல் நம் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான்.

கவிதன் said...

நிலாவே நிலவைப்பற்றிகவிதை எழுதியிருப்பது அழகு!!!

வைகறை நிலா said...

உங்களுடைய அழகான பாராட்டுக்கு மிக்க நன்றி..